தமிழ்மணமும் தொடர்பதிவுகளும்..



தமிழ் மனம் விருதுகள் அனைவரும் அறிந்ததே. அந்த போட்டியில் கலந்து கொள்ளாத பதிவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனது பதிவுகள் எனைத்தும் மொக்கையாக இருந்தாலும் அதிலிருந்து சில சுமாரான பதிவுகளை தேர்ந்தெடுத்து ஒரு ஆர்வக்கோளாறில் மூன்று பதிவுகளை நானும் போட்டிக்கான பகுதியில் இணைத்திருந்தேன். இது நடந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. ஏறக்குறைய இந்த விஷயத்தை மறந்து விட்டேன் எனலாம். சொல்லப் போனால் எந்த பகுதியில் எந்த இடுகையை இணைத்தேன் என்பதையே மறந்து விட்டேன்.

இன்று எதேச்சையாக தமிழ்மணத்தில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்று நோட்டம் விடுகையில் கண்ணில் பட்டது தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள் . அப்போது தான் நானும் இந்த போட்டியில் பங்கேற்றதும் எனது சில இடுகைகளை இணைத்ததும் நினைவுக்கு வந்தது. நமது இடுகை எப்படியும் இங்கு இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் யார் யாரது இடுகைகள் எல்லாம் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கிறது என்று ஒவ்வொரு பகுதியாக பார்த்துக்கொண்டிருக்கையில் அங்கே ஒரு பிரிவில் பார்த்த ஒரு பதிவை என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய ஒரு பதிவும் இரண்டாவது சுற்றிற்கு தேர்வாகியிருக்கிறது.


வாக்களித்து முதல் சுற்றில் வெற்றி பெற செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி, மற்றும் மக்களே யார் யார் இன்னும் இந்த இடுகைக்கு வாக்களிக்கவில்லையோ அவர்கள் கோழி பிரியாணிக்கும், 2000 / - ரூபாய் பணத்திற்கும் (ஒரு ஓட்டுக்கு இப்போ 2000/- ரூபாய் தானே தறாங்க) ஆசைப்படாமல் சென்று வாக்களியுங்கள்.

..நன்றி..

*****************************************************************************

சீரான எழுத்துக்களால் கவிதைகள், கதைகள் என எழுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அலைவரிசை நண்பர் அஹமத் இர்ஷாத் அவர்கள் கடந்த ஜூலை மாதம் என்னை தொடர் பதிவெழுத அழைத்திருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை இன்று வரை அந்த பதிவை என்னால் எழுத முடியவில்லை. ரொம்ப கஷ்டமான விசயமாக இருக்குமோ என்று நீங்கள் யோசிக்கலாம், உண்மை தான்.. நீங்களே ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து எழுதுங்கள் என்று முழு சுதந்திரமும் தந்திருந்தார்.

ஒரு தலைப்பை தந்து இந்த தலைப்பில் தான் எழுத வேண்டும் என்றாலே நமக்கு கண் விழி பிதுங்கி போய் விடும். நானும் நண்பர் அன்பாக அழைத்தாரே எப்படியாவது ஏதாவது ஒரு தலைப்பை வைத்து எழுதி விட வேண்டுமென்று எழுத முடிவு செய்து மாதங்கள் ஐந்து ஆகி விட்டது. ஆனால் இன்னும் என்னால் எந்த தலைப்பையும் தேர்வு செய்து எழுத முடியவில்லை. எப்படியோ அதையும் காரணமா வச்சு ஒரு பதிவு ரெடி பண்ணியாச்சு..


*****************************************************************************

நீ நான் அவன் என்ற தளத்தில் எழுதும் நண்பர் வெற்றி அவர்கள் என்னை கமலின் சிறந்த பத்து படங்கள் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். அவருக்காக எனக்கு பிடித்த சில படங்களை இங்கே பகிர்கிறேன்.

  • அன்பே சிவம்
  • வேட்டையாடு விளையாடு
  • வசூல் ராஜா M B B S
  • பம்மல் K சமந்தம்
  • பஞ்ச தந்திரம்
  • அவ்வை சண்முகி
  • அபூர்வ சகோதரர்கள்
  • சத்யா
  • தெனாலி
  • மைக்கேல் மதன காமராஜன்.
*****************************************************************************

அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு.. ஒரு வழியா நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலிருந்து போன வாரம் வரைக்கும் என்னையும் மதிச்சு கூப்பிட்ட அத்தனை தொடர்பதிவுகள் எல்லாம் எழுதி முடிச்சாச்சு.. இது தான் என்னோட கடைசி பதிவும், யாருல அங்கே விசிலடிச்சு கை தட்டி சிரிக்கிறது... படுவா கொன்னேபுடுவேன்.. ஓவரா சந்தோஷ படாதீங்கல.. நான் சொன்னது இந்த வருசத்துக்கு.. ஓகே மக்கள்ஸ் எல்லாருக்கும் என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இப்பவே சொல்லிக்கிறேன்.. சந்தோசமா அடுத்தவங்களுக்கு சங்கடமில்லாம கொண்டாடுங்க..

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆண்டுவிழாக்களும் அலப்பறைகளும்..

வாழ்வின் கடைசி நாட்கள் வரை மறவாத அல்லது மறக்க முடியாத இனிமையான பொழுதுகள் என்று கேட்டாலே அதில என் பள்ளி நாட்களையும் தாராளமா, இல்ல இல்ல கண்டிப்பா சேர்க்கலாம். ஒரு கவலையும் இல்லாம, தெரியாம ஓடியாடி எல்லாரையும் ஓட்டி எடுத்து, பல பன் வாங்கி நடந்த காலம் அது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தது வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தொடக்கப்பள்ளியில தான். அங்க ஆண்டுக்கொரு முறை ஏதாவது விழா நடத்த வேண்டுமே என்று வேண்டாவெறுப்பாக நடத்துவாங்க. அதுக்கு எங்க கிட்ட ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் வசூலிப்பாங்க அந்த காசை வீட்டிலிருந்து வாங்குவதற்கு ரெகமன்டேசன் தேடி அலைஞ்சிருக்கேன். எதுவும் கெடைக்காம வீட்ல இருந்து காசு வாங்க நான் பட்ட பாடு இன்னொரு கட்டுரை தேறும். அந்த காசில் தான் ஆண்டு விழாவிற்கான அலங்கார பெருட்கள், மதிய சாப்பாட்டுக்கு உணவுப்பொருட்கள் எல்லாம் வாங்குவாங்க. ஆண்டுவிழாவிற்கு தலைமை தாங்குவதற்கும் ஊரிலுள்ள பெரியவர்களை தான் அழைப்பார்கள். அவங்க அங்க வந்து நாட்டாமை பண்ணுவாங்க பாருங்க, எங்க வாத்தியார் எல்லாம் அசடு வழிஞ்சே சமாளிப்பாங்க. அந்த ஆண்டுவிழாவின் போது எங்களுக்கு சந்தோசம் தரக்கூடிய ஒரே விஷயம் ஆடை தான், அன்று மட்டும் தான் எங்கள் பள்ளியில் சீருடை இல்லாம மற்ற உடைகள் அணிய அனுமதி. மற்றபடி ஆண்டு விழாக்களில் நடக்கும் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. ஹி ஹி எப்டியும் நாம தான் ஜெய்போம். பாராட்டுவாங்க. நமக்கு தான் மத்தவங்க பாரடுனா ஒரே ஷய்யா இருக்குமே. நாங்க எல்லாம் அப்பவே அப்டி தெரியுமா.

ஆறாம் வகுப்பில் சற்று தொலைவில் உள்ள பள்ளியில் என்னை சேர்த்து, இல்ல தள்ளி விட்டாங்க . அந்த வட்டாரத்திலையே அது தான் பழமையான மற்றும் பெரிய பள்ளிக்கூடம். படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் அதிகம். இங்க பழைய பள்ளி போல இல்லாம ஆண்டு விழாக்களை பெரிய அளவில் நடத்துவாங்க. என்னடா விழாவ பத்தி மட்டும் சொல்றானேன்னு நெனைக்கலாம், அது தான் இப்பவும் பசுமையா ஞாபகம் இருக்கு. விழாவில் சிறப்பு விருந்தினராக MLA அல்லது MP தான் கலந்து கொள்வார்கள். விழா ஆரம்பிக்க ஒரு வாரத்திற்கும் முன்னாடியே அதுக்கான ஆயுத்த வேலைகள் தொடங்கிடும். பெரும்பாலும் பசங்களே எல்லா வேலைகளையும் செஞ்சிடுவாங்க, ரெண்டு மூணு ஆசிரியர்கள் மேற் பார்வை பாப்பாங்க . இது ஒரு பக்கம், மத்தவங்க ஆண்டுவிழாவில் நடைபெறவிருக்கும் ஆடல், பாடல்ன்னு பலவிதமான கலை நிகழ்சிகளுக்கு ஒத்திகை பார்க்க தொடங்குவாங்க. இப்படியாக விழாவிற்கு முந்தைய ஓரிரு வாரங்கள் பலருக்கு கொண்டாட்டம். காரணம் ஒன்னும் இல்ல, இந்த தினங்களில் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. காலையில் வருகைப்பதிவு குடுத்தாலே போதும். அது தான நமக்கு முக்கியம்.

புது பள்ளி, புது சூழல், புதிய நண்பர்கள் என ரெண்டு வருஷம் நல்ல பிள்ளையாய் எந்த வம்பு தும்புக்கும் போனது இல்ல. எந்த நிகழ்சிகளும், மற்றும் விளையாட்டுகளும் கலந்து கொள்ளவில்லை. அப்பறம் எட்டாம் வகுப்பு வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது. நண்பர்கள் கூட்டம் மாறிப்போனது, சீ நாறிப்போனது. எதிரிகள் அதிகமானார்கள் (ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்) இவர்களில் யாரை எங்களுக்கு பிடிக்கவில்லையோ அவனை பழிவாங்குவது ஆண்டுவிழாக்களில் தான். பழிவாங்கறது அப்டினா அடிதடியெல்லாம் இல்லை அந்த பையன் எந்த விளையாட்டில் பங்கெடுக்கிறானோ அந்த விளையாட்டில் கண்டிப்பாக நாங்களும் இருப்போம். வாலி பால் விளையாட்டென்றால் அவன் டீமிலையே தான் நாங்களும் இருப்போம். எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான் முக்கியம் அது நம்ம டீமா இருந்தாலும் சரி. அதே மாதிரி ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு அவனுடனையே ஓடி அவன் காலை தட்டி விடுவது என எல்லா விதமான தொந்தரவுகளும் கொடுப்போம். சுருக்கமா சொன்னா வில்லன் வேலைய சரியா பாத்திருக்கேன்.

பேஸ் பால். கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் நாங்கள் தான் எப்பவும் ஹீரோ, வெற்றியும் எங்களுக்கு தான், காரணம் அந்த பால்வாடிகள் (அதுதாங்க படிக்கிற பசங்க) இந்த மாதிரி உடம்புக்கு சேதாரம் உண்டாகும் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. அதனால் நமக்கு எதிரணி தான் எதிரி.

எதிரிகளை அதோடு விட்டுவிடுவதில்லை. படிக்கிற பசங்க தான் பாட்டு போட்டி, பேச்சு போட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொல்வார்களே, அப்படி பாடும் போதும், பேசும் போதும் சத்தமிடுவதும், அவர்கள் பாடும் பாட்டுகளுக்கு எதிர் பாட்டுகள் பாடுவதும் என அங்கேயும் நாங்கள் கைவரிசையை காட்டிவிடுவோம். இது போன்ற குறும்புகளும், சின்ன சின்ன சண்டைகளும் பத்தாம் படிக்கும் வரையில் தான் நடந்தது.

+1 மற்றும் +2 வந்த போது பள்ளியில் நாங்கள் தான் சீனியர். அதனால பெரும்பாலும் அலங்காரம், நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் உணவு சம்மந்தப்பட்டவை போன்ற எல்லா பொறுப்புகளும் எங்களிடம் தான் வரும். அந்த சமயங்களில் எங்களுக்கு எதிரிகள் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இல்லைன்னு தான் செல்லனும். அதனால எல்லா வேலைகளையும் மாணவர்கள், மாணவியர் என நாங்களனைவரும் ஒற்றுமையாக தான் செய்வோம். அந்த நேரங்களில் வகுப்புகளுக்கு செல்வதே கிடையாது. ஆசிரியர்களும் இதை கண்டுகொள்ள மாட்டாங்க. காரணம் அனைவரும் ஓரளவு படிக்கும் மாணவர்கள். (நானும் தாம்பா.. நம்புங்க). இப்படி எப்படியோ நல்லபடியா பள்ளிக்காலம் முடிவுக்கு வந்தது.

கல்லூரி நாட்களில் ஆண்டுவிழாக்கள் பள்ளிக்காலங்களை போன்று சுவாரஸ்யமாக இருந்ததில்லை. ஆனால் கல்லூரியில் ஆண்டுவிழா நடக்கப்போகிறது என்ற செய்தி நோட்டீஸ் போர்டில் பார்த்தால் உடனே எங்களுக்குள் ஒரு மீட்டிங் நடக்கும், அந்த நாளில் எங்கு செல்லலாம் என்று. அன்றே முடிவெடுத்து அதற்குண்டான வேலைகளையும் செய்ய துவங்கி விடுவோம். கல்லூரியில் எங்கள் டீமில் மொத்தம் 14 பேர். ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று கட்டண வசூல் தொடங்கி விடுவார்கள். ஒரு நண்பனின் வீட்டில் வைத்து வித விதமாய் சமைத்து எடுத்து வருவார்கள். முதல் தடவை நாங்கள் சென்றது காளிகேசம் என்றொரு இடம். அது மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு காட்டு பகுதி. (கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ளது) அங்கே பொதுவா ஒரு குறிப்பிட்ட இடம் வரை செல்ல அனுமதி உண்டு. நமக்கு தான் ரூல்ஸ் பிடிக்காதே ஆனால் நாங்கள் காட்டிற்கு உள்ளே சென்று விடுவோம். காலையில் 10 அங்கே சென்றால் மாலை 5 மணி வரை மலையாற்றில் குளியலும் கும்மாளமமுமாய் தொடரும், அந்த இடம் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு. அப்பறம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அங்க போய்டுவோம். முதல் ரெண்டு வருஷம் ஆண்டு விழா எங்களுக்கு காளிகேசத்திலையே கலகலப்பாய் கடந்து சென்றது. இறுதியாண்டில் நாங்கள் கட்டாயமாய் கலந்து கொள்ள வேண்டிய நிலை. பாட்டு கூத்து கும்மாளம் எதுவுமில்லாமல் எதிரிகள், நண்பர்கள் என அனைவரும் ஓன்று கூடி நண்பர்களாகவே பிரிந்தோம்.

**************************************************************

ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிதறல்கள் எனும் தளத்தில் எழுதும் சகோதரி தீபா அவர்கள் பள்ளி ஆண்டு விழா அனுபவங்கள் என்ற தலைப்பில் என்னை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருந்தார்கள், தாமத்திற்கு ஒரு மன்னிப்பை கூறிவிட்டு, என் வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காத பள்ளி மற்றும் கல்லூரி காலங்களை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பை தந்த சகோதரி தீபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

**************************************************************

2010 எனக்கு பிடித்த பாடல்கள்


கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

படம் - அங்காடித் தெரு
இசை - GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர் - பிரசன்னா
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை



பாடல் - உசுரே போகுதே
படம் - ராவணன்
இசை - கார்த்திக் & முகமது இர்ஃபான்


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில



பாடல் - பூக்கள் பூக்கும் தருணம்
படம் - மதராசப்பட்டிணம்
இசை - GV பிரகாஷ்
பாடியவர்கள் - GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா
பாடலாசிரியர் - நா. முத்துகுமார்.

பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே



பாடல் - இதுவரை இல்லாத உணர்விது..
படம் - கோவா
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் - அஜீஷ், அண்ரியா

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே



பாடல் - யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
படம் - ஆடுகளம்.
இசை - GV பிரகாஷ் குமார்
பாடியவர் - GV பிரகாஷ் குமார்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே நானே



பாடல் - அன்புள்ள சந்தியா...
படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காற்றில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்



பாடல் - அடடா மழைடா அட மழைடா
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், சைந்தவி


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு



பாடல் - இறகை போலே அலைகிறேனே
படம் - நான் மகான் அல்ல
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் - யுகபாரதி
பாடியவர் - யுவன் ஷங்கர் ராஜா & தன்வி ஷா

இறகை போலே,
அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே,
தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு கற்று பட்டதும்,
அநியாய காதல் வந்ததே,
அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ
மின்னல் போலே தொட்டு சென்றதே..



பாடல் -
மஹா ஜீய மஹா ஜீய
படம் - தமிழ்படம்
இசை - கண்ணன்
பாடியவர்கள் - ஹரிஹரன் ஸ்வேதா மோகன்


மஹா ஜீய மஹா ஜீய
நக்க முக்க நக்க
- ஷகலக்க - ரண்டக்க

லாஹி லாஹி
அயக யஹி யஹி
மீ ஹூ மீ ஹூ
டைலமோ டைலமோ
ரஹ்டுள்ள சோனாலி ஓஹ


இந்த பாடல் எனக்கு பிடித்த சில பாடல்களே.. வெளிவந்தும் பலருக்கும் தெரியாத பாடல்கள் மற்றும் இன்னும் வெளிவராத படங்களிலுள்ள பாடல்கள் என் நிறைய எனக்கு பிடித்த பாடல்கள் உள்ளன.

பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள்..

2001 to 2010 கடந்த பத்தாண்டுகளில் வந்த பல திரைப்படங்களில் ஏராளமான பாடல்கள் பிடித்திருந்தாலும் ஒரு சில பாடல்களே எப்போது கேட்டாலும் அலுக்காத படி மனதோடு ஒன்றிப்போனது.. அந்த ஒரு சில பாடல்களிலும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களை எப்பூடி என்ற தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் ஜீவதர்ஷன் அவர்களின் அழைப்பை ஏற்று சில பாடல் வரிகளோடு இங்கே பகிர்கிறேன்.




பாடல் : வெண்மதியே வெண்மதியே நில்லு
படம் : மின்னலே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : திப்பு
எழுதியவர் : வாலி

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

************************************************************

பாடல் : தனியே தன்னந்தனியே
படம் : ரிதம்
இசை : AR ரஹ்மான்
பாடியவர் : ஷங்கர் மகாதேவன்
எழுதியவர் : வைரமுத்து

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை வென்று விடுவேன்
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே

ஓ தனியே தனியே தனியே

அக்டோபர் மாதத்தில் அந்திமழை

வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்

இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்



************************************************************

பாடல் : கோலிக்குண்டு கண்ணு
படம் : எம்மகன்
இசை : வித்யாசாகர்
பாடியவர் : கார்த்திக், கல்யாணி மேனன்.

கோலிக்குண்டு கண்ணு
கோவப்பழ உதடு

பாலப்போல பல்லு

படியவெச்ச வகுடு
ஆளத்தின்னும் கன்னம்
அலட்டிக்காத கையி
சொளத்தட்டு காலு
சொக்கவைக்கும் வாயி

தேளுத்தொட்ட உன்ன
தேடிவந்தேன் தாயி


************************************************************

பாடல் : ஏதேதோ எண்ணங்கள் வந்து
படம் : பட்டியல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜ, ஷ்வேதா


ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போனதே
வழிதேடி
மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்யுதே
அலைந்தது
அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்
மிதந்தது
மிதந்தது இரவென மிதந்தது
வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்
புரிந்தது
புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது
உயிர் வரை தெளிந்தது பார்


************************************************************

பாடல் :விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்..
படம் : திருவிளையாடல்.ஆரம்பம்.
இசை : டி.இமான்
பாடியவர் : ஹரிஷ் ராகவேந்திரா

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளிது வைதாய்
சின்ன சின்ன சிரிபினில் சிதரடிதாய்
சிதரிய இதயதை திருடிக் கொண்டாய்
யார் என்று
நான் யார் என்று
அடி மரந்தே போனதே
உன் பெயரை கூட தெரியமல்
மனம் உன்னை சுற்றுதே


************************************************************

பாடல் : டிங் டாங் கோயில் மணி
படம் : ஜி
இசை : வித்யாசாகர்
பாடியவர் : மது பாலகிருஷ்ணன், சாதனா சர்கம்

டிங்க் டொங்க் கோவில் மணி...
கோவில் மணி நான் கேட்டேன்
உன் பெயர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி
ஆஹாஆஆஆ...........
நீ தந்தது காதலில் உயிர் வலி

************************************************************

பாடல் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா..
படம் : எனக்கு 20 உனக்கு 18
இசை :
AR ரஹ்மான்
பாடியவர் : உன்னி மேனன், சின்மயி

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்
ஒரு முறை சந்திப்போமா?

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம்
இல்லை இதயத்திலே


************************************************************

பாடல் : முன்பே வா அன்பே வா
படம் : சில்லென்று ஒரு காதல்
இசை :
AR ரஹ்மான்
பாடியவர் : நரேஷ் அய்யர் , ஸ்ரேயா கோஷல்

முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா முன்பே வா
என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா


************************************************************

பாடல் : நீ தூங்கும் நேரத்தில்
படம் :
மனசெல்லாம்

இசை :
இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஓ..கண்மணியே..
கண்ணுக்கு கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என் உயிரே ஓ.. என் உயிரே..


************************************************************

பாடல் :சாமி கிட்ட சொல்லிபுட்டேன்
படம் :
தாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயா க்ஹோசல்

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ….



************************************************************


போனஸ் பாடல்..

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. இனி வரும் காலம் என்ற படத்திலுள்ள பாடல் இது. இந்த படம் வெளி வந்ததா என்று கூட தெரியவில்லை. பரணியின் இசையில் ஹாரிஸ் ராகவேந்திரா தனது மயக்கும் குரலில் ஒரு பெண்ணை வருணித்திருப்பார். இந்த பாடலின் காணொளி கிடைக்கவில்லை.





ஓரமாய் ஒன்றிரண்டு - 2



அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்....


---------------------------------------------------------------------------



வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்.

---------------------------------------------------------------------------




தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...


---------------------------------------------------------------------------





சமகால கல்வி முறை ஒரு பார்வை...!

அன்னைக்கும், தந்தைக்கும் பின் நாம் மதிப்பது கல்வி கற்று கொடுக்கும் குருவை தான். ஆனால் அந்த குருக்கள் மிதிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். இன்று கல்வி நிலையங்களில் தான் பல அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. ஆசிரியர் மாணவியர்களிடம் முறை கேடாக நடந்து கொண்டார் என்றும், மாணவிகள் தற்கொலை என்றும் வாரத்திற்க்கொருமுறை செய்தி தாள்களில் வருமளவிற்கு வந்து விட்டது நிலை. மேலும் மாணவ மாணவியரை அடித்து துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளாலும் காயப்படுத்துவது மட்டுமல்லாமல் படிக்க வரும் மாணவ மாணவியரைக் கொண்டு பள்ளிக்கூடத்திலுள்ள வேலைகளை செய்ய வைப்பது போன்ற பல கொடுமைகள் நடந்து வருகின்றன. இப்பொழுது இதற்கும் ஒரு படி மேல் சென்று தன்னிடம் பயிலும் மாணவ மாணவியரை கொண்டு தங்கள் வீட்டு வேலைகளை செய்ய வைக்குமளவிற்கு முன்னேறி இருக்கின்றனர் பல ஆசிரியர்கள். பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருக்கும் நேரத்தை விட ஆசிரியர்கள் கவனிப்பில் இருக்கும் நேரம் தான் அதிகம், பெற்றோர்களுக்கு சமமாக மதிக்கப்படும் ஆசிரியர் பெருந்தகைகள் இப்படி தவறு செய்தால் பெற்றோர்கள் எந்த தைரியத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் ?.

இது போன்ற காரணங்களால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினாலும் அவர்களால் முடிவதில்லை. காரணம் பணம். அங்கே பணம் தான் தான் பிரதானம். இன்றைய சூழலில் ஒரு சாமானியன் தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்ப்பது என்பது அவனுக்கு பகல் கனவு தான்.. அப்படியே எப்பாடு பட்டாவது சேர்த்துவிட்டாலும் மாதா மாதம் அதற்கு இதற்கு என்று காரணமே இல்லாமல் வசூலித்துவிடுவார்கள். மேலும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டுமானால் தாயும் தந்தையும் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படிஎன்றால் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுத்து எப்படியாவது பெரிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கும் ஏழை பெற்றோர்களின் நிலை ?. இது போன்ற பல காரணங்களால்படிப்பு என்பது ஏழைக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க படிக்கும் பிஞ்சுகளின் நிலையோ இன்னும் மோசமானது. வீட்டில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என பாசங்களின் அரவணைப்பில் இருக்க வேண்டிய குழந்தைகளை இரண்டரை வயதிலையே பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அந்த பிஞ்சுகளை விடுமுறை நாட்க்களில் கூட நிம்மதியாக விளையாட விடாமல் பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸ் என பிழிந்து எடுத்து விடுகிறார்கள். இவற்றை முழு மனதோடு கற்றுகொள்ளும் அளவிற்கு அந்த குழந்தைகள் பக்குவபட்டிருக்க மாட்டார்கள். அந்த குழந்தைகளை பார்க்கவே பாவமாக இருக்கும். அவர்களின் மழலை பேச்சும், செய்யும் குறும்பும் இதை விட்டால் எப்போது நம்மால் ரசிக்க முடியும். ஆகையால் பெற்றோர்களே குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்.


இன்றைய பெரும்பாலான படிப்புகள் வெறும் சான்றிதழ்கள் எனும் காகிதங்களுகாக மட்டும் தான் நம் கையில் உள்ளது. மாணவர்களும் ஏதாவது படித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் தான் படிக்கின்றனர். அப்படியே படித்தாலும் அவர்கள் அந்த படிப்பு சமந்தப்பட்ட வேலையில் தான் இருக்கிறார்களா என்றால் 90 % இல்லை என்று தான் கூற முடியும்.. உதாரணத்திற்கு நான் பணிபுரியும் நிறுவனத்தில் MSC computer science படித்த நண்பர் ஒருவர் செய்யும் வேலை Data Entry. இன்னொருவர் படித்தததோ Teacher Training ஆனால் அவர் செய்வதோ Welding வேலை. இது போன்று தான் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாமல் ஓன்று ரெண்டல்ல எண்ணி சொல்ல முடியாத அளவிற்கு நம்மவர்கள் மகிழ்ச்சியை விற்று, குடும்பம் மறந்து வெளிநாடுகளில் உள்ளனர். காரணம் படித்த படிப்பிற்கு சொந்த நாட்டில் மதிப்பில்லை, அதற்க்குண்டான வேலை வாய்ப்புகளும் இல்லை. அப்படியே ஏதாவது வேலைகள் கிடைத்தாலும் அதற்குரிய ஊதியம் கிடைப்பதில்லை. ஒருவர் 10000/- ரூபாய்க்கு வேலை செய்ய தயாராக இருந்தால் இன்னொருவர் 8000/- ரூபாய்க்கு தயார், வேறொருவர் 5000/- ரூபாய்க்கு வேலை செய்யவும் தயாராக இருக்கிறார். படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகிறது. படித்த படிப்பிற்கு மதிப்பும் கிடைப்பதில்லை. இது போன்ற காரணங்களால் எந்த வேலையானாலும் சரி என்று வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் பலர்..

இந்தியாவின் தென் கோடியிலுள்ள கன்னியாகுமரியை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. கல்விக்கு பஞ்சமில்லாத ஒரு மாவட்டம். அங்குள்ள கல்வி நிறுவனங்களை எளிதில் எண்ணி கூறமுடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வருடமும் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது, அங்கே இல்லாத துறைகளே இல்லை எனலாம். நானறிந்து அங்கே இல்லாதது Marine சமந்தப்பட்ட படிப்புகள் மட்டுமே. அது போன்றே அங்குள்ள 90% பேர் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பார்கள் ஆனால் இவர்களில் ஒரு சிலரை தவிர எவரும் படிப்பிற்குரிய வேலையை எதிபார்ப்பது கூட இல்லை. படித்த படிப்பு ஒருபக்கம் இருக்கட்டும் என்று சொந்தமாக ஏதாவது தொழில் தொடக்கி விடுவார்கள், பெரும்பாலானோருக்கு படித்து வாங்கிய பட்டங்கள் பெயருக்கு பின்னால் போட்டு அழகு பார்ப்பதற்கே பயன்படுகிறது. சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் "ஏன் BE யோடு நிறுத்தி விட்டாய் ME சேர்ந்திருக்கலாமே" என்று கேட்டதற்கு அவர் "எப்படியும் இந்த படிப்பை கொண்டு நான் எந்த வேலைக்கும் போகப்போறதில்லை கல்யாணம் செய்வதற்கு இந்தபடிப்பு போதுமானது" என்று கூறினார். இது தான் இன்றைய உண்மை நிலையும் கூட. பட்டம் வாங்குவது திருமணம் என்ற பெயரில் அதிகமாக வரதட்சணை வாங்குவதற்கும், சுய மதிப்பிற்க்காகவும் மற்றும் வேறு சில லாபங்களுக்காகவும் என்பது தான் வேடிக்கை.

இன்றைய இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எப்போதும் பிரச்சனைக்குரிய விசயமாக இருப்பது ஜாதி மத பிரச்சனைகள் தான். "ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பாரதியின் வாக்கை பொய்யாக்கிவிட்டு" எங்கும், எதிலும் ஜாதி மதம் என்ற நிலையை கொண்டுவந்துவிட்டார்கள் நம் நாட்டு அரசியல்வாதிகள். இது போன்ற ஜாதி மத பிரச்சனைகளுக்கு அடிக்கல் நாட்டுமிடம் சில பள்ளிகளும் கல்லூரிகளும் தான். ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும் தனித் தனி பள்ளி கல்லூரிகள் இருக்கின்றன. இது போன்ற கல்வி நிறுவனங்களில் அந்தந்த ஜாதி மதத்தினருக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஒரு சில ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் உள்ளத்தில் சிறு வயதுகளிலேயே ஜாதி மத உணர்வுகளை விதைத்து விடுகிறார்கள். மேலும் கல்லூரிகளில் மாணவர்கள் ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகிகள் அவர்களுக்கிடையில் வேற்றுமைகளை விதைப்பதுண்டு. (இது போன்றொரு சம்பவம் நான் பயின்ற கல்லூரியில் நடந்தது.) இது போதாதென்று ஜாதிகளே வேண்டாம் எனும் அரசாங்கமே ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது. இந்தியாவில் ஏற்ப்படும் பல ஜாதிக் கலவரங்களுக்கு மறைமுகமாக அரசாங்கமும், ஆசிரியர்களும் தான் காரணமாக இருக்கின்றனர்.




காணமல் போன கதை..

எத்தனை நாள் உழைப்பு .. இதற்காக தூக்கம் தொலைத்த நாட்கள் தான் எத்தனை.. அதற்காக அம்மாவிடமிருந்து எத்தனை முறை திட்டு வாங்கியிருப்பேன்.. எங்கே போயிருக்கும் ? எப்படி போயிருக்கும் ? யார் எடுத்திட்டு போயிருப்பா? இப்படி ஆயிரம் கேள்விகள் என்னுள் அலை அலையாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

நேற்று இரவு தூங்க போகும் வேளையில் கூட பார்த்தேன் என் மேஜையின் மீது தான் இருந்தது. வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லாமிலிருந்தால் யாரென்று பாராமல் திட்டி தீர்த்து விடுவதால் அறையை சுத்தம் செய்வதற்கு கூட அம்மா என் அறைக்குள் வருவதில்லை. என்னறையினுள் என்னனுமதியின்றி இரவு தூக்கத்தில் வரும் கனவை தவிர எவரும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் என் பார்வை படாமல் வெளியில் போக வழியுமில்லை.

ஆனால் என்னறைக்கு தைரியமாக வருவது அண்ணன் மகன் மட்டும் தான். போன வாரம் அவனுக்காக வாங்கி வந்த ஒரு முகமூடியை வைத்து அவனை பயமுறுத்தியதால் அந்த பக்கமே வருவதில்லை, அப்படியே வந்தாலும் அம்மா அல்லது பாட்டி துணையுடன் தான் வருவான். ஆகையால் அவனும் எடுத்திருக்க வாய்ப்பில்லை.

அம்மாவிடம் கேட்க்கலாம் என்றால் "என்னடா இன்னும் ஒரு பொறுப்பில்லாம நடக்குற ஒரு பொருளையே ஒழுங்கா வச்சுக்க தெரியல நீயெல்லாம் எப்படிடா வாழ்க்கையில முன்னுக்கு வரப்போறேன்னு" புராணம் பாட ஆரம்பித்து விடுவார்கள்.

அப்பாவிடம் கேட்க்கலாம் என்றால் என்னை திட்டுவதற்கு அவருக்கு ஒரு காரணம் கிடைத்தது போல ஒரு மாதத்திற்கு இதையே சொல்லி சொல்லி காண்பிப்பார். ஆகையால் அவரிடமும் கேட்க முடியாது.

போலீசிடம் சென்று புகார் தராலாம் !! ஆனால் கோர்ட் கேஸ் என்று மாதக்கணக்காக அலைய விடுவார்கள். போலீசுக்கு மாமூல், வக்கீலுக்கு பீஸ் என வட்டிக்கு பணம் எடுத்து தான் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதுவும் சரி பட்டு வராது.

பத்திரிகைகளில் விளம்பரம் தரலாமென்றால் அங்கும் செலவு அதிகம், அது மட்டுமல்லாமல் இது பற்றி பலருக்கு தெரிய வரும், முகமறியாத பலர் இதனை சொந்தமாக்க முனையலாம். நான் அதற்காக பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு தெரியவும் வாய்ப்பில்லை. அதன் அருமையும் தெரியாது. ஆகவே பத்திரிக்கையும் வேண்டாம்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்காக யாரை பார்ப்பதென்றும் தெரியவில்லை.. நண்பர்களே இதோ உங்களிடமே சரணடைகிறேன்.

எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் நாளை நடக்கவிருக்கும் ராமாயணம் நாடகத்தில் அனுமார் வேடத்திற்காக நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள்.

மனிதம்..

கலைந்த கேசம், பொட்டில்லா நெற்றி, செருப்பில்லா கால்கள், அழுக்கான உடைகள், களையிழந்த முகத்துடன் வந்து கொண்டிருந்த அந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் தள்ளாடிய நடை என் கண்களை விட்டு அகலவில்லை,

அடிவயிற்றில் ஒரு கைவைத்து மறுகையால் ஆதரவிற்காக சுவற்றில் பிடித்துக்கொண்டு மெதுவாய் வந்து கொண்டிருந்தாள்.

கண்கள் உள்வாங்கியிருந்தன, அந்த பெண் சாப்பிட்டு இரண்டு நாட்க்களுக்கு மேலிருக்கும் என்பதை அவள் முகமும், சோர்ந்து போன நடையும் கூறியன.

மெதுவாய் 20 அடி தூரம் தான் நடந்து வந்திருப்பாள் அப்பெண், அதற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை, அங்கேயே அமர்ந்தவள் சிறிது நேரத்தில் அடிவயிற்றில் கைவைத்துக்கொண்டு கீழே படுத்தவள் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்.

அனைவரின் கையிலும் ஆறாம் விரல் போல அலைபேசிகள் இருந்தும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன்..

நாகரீகம் கலாச்சாரம் என அனைத்தும் வளர்ச்சியின் உச்சிக்கு போனாலும் வேடிக்கை பார்க்கும் விசயத்தில் எங்களுக்கு ஆறறிவில் ஓன்று குறைவு தான் என்பதை போல கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேர ஆரம்பித்தது. அந்த பெண்ணை சுற்றி அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர எவரும் முன்வரவில்லை.. அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்..

கடைவீதியில் அத்தனை பெரும் பார்த்துக்கொண்டிருக்க யார் உதவியும் இல்லாமல் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

கண்திறந்து பார்க்கவும், வாய்திறந்து பேசவும் முடியாமல் படுத்துக்கிடந்தவள் செய்கையால் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாள். ஆனால் அருகிலிருந்த ஆண்கள், பெண்கள், இளையவர், முதியவர் என அனைவரும் எதோ விளம்பர படம் பார்ப்பது போன்று வேடிக்கை பர்த்துக்கொண்டிருந்தார்களே தவிர எவரும் உதவ முன்வரவில்லை.

சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டாள் அப்பெண். ரத்த வாடை காற்றில் பரவத்தொடங்கியது. ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆறறிவு கொண்ட சொறிநாய்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாய் நின்று கொண்டிருக்க, ரத்த வாடையை மோப்பம் பிடித்த படி வரத்துவங்கின ஐந்தறிவு கொண்ட தெரு நாய்கள்.

அதற்கு மேல் அங்கு நிற்க திராணியில்லாமல் நடக்க துவங்கினேன் அக்கூட்டத்தை விட்டு..

**************************

இங்கே சொல்லியிருக்கும் நான் என்பது நானல்ல... இது கற்பனைக்காக எழுதியதும் அல்ல. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் ஒரு மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஒரு கடைத்தெருவில் நடந்த சம்பவம் இது..

**************************

கிறுக்கல்கள் சில..




அவ்வப்போது மனதில் கவிதையல்லாத கவிதைகளை நாட்குறிப்புகளில் குறித்து வைக்கும் பழக்கம் இருந்தது பள்ளிக்காலம் முதல்.. இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன். அப்படி கிறுக்கியவற்றில் சில இங்கே..



மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...

******

எத்தனை பேர்,
எத்தனை காலங்கள்
எத்தனை விதமாக கூறினாலும்
அழகு குறையாமல் மேருகேறிக்கொண்டிருக்கும்
மென்மையான உணர்வு "காதல்"..

******


மௌனமாய் நகர்ந்து கொண்டிருகின்றன பொழுதுகள்..
என்னை நிலைதடுமாற வைத்தபடி பேசிக்கொண்டிருக்கின்றன
அவள் கண்கள்..

******


அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...

******


தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...

******

இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..

********************

டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்..
***

வண்ணத்துபூச்சி..

பெய்து தீர்க்கிறது மழை.

நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..

காகிதக் கப்பல் செய்து
வெள்ளோட்டம் பார்க்கிறார்கள்
பக்கத்து வீட்டு வாண்டுகள்..

வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள் அம்மா...

ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா...

மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...

என் கவலையெல்லாம்

சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...

----------